பெரம்பலூரில் கொடி நாள் வசூலை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

பெரம்பலூரில் முன்னாள் படைவீரர்களுக்கான கொடி நாள் வசூலை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

Update: 2021-12-07 16:45 GMT

பெரம்பலூரில் முன்னாள் படைவீரர்களுக்கான கொடி நாள் வசூலை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி  வைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற்ற கொடி நாள் நிதி வசூல் துவக்க நிகழ்ச்சியில் கொடி நாள் நிதி வசூலினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிதி வழங்கி துவக்கி வைத்தார்.

மேலும் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும் கொடி நாள் நிதி வசூல் அதிகம் வசூல் செய்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் , மாவட்ட ஊராட்சி தலைவர் சி.ராஜேந்திரன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட வருவாய் அலுவலர்  நா.அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர்  நிறைமதி சந்திரமோகன்,முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் (லெப்.கமாண்டர் ஓய்வு) தி.சங்கீதா உள்ளிட்ட முன்னாள் படை வீரர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News