பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-11 08:29 GMT

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக விவசாயிகள் சங்கம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் பெரம்பலூர் மாவட்டதில் கடுமையான உரத் தட்டுபாடு (யூரியா) நிலவுவதாகவும்,இதனை பயன்படுத்தி தனியார் உரக்கடை நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும்,மேலும் கையிருப்பு வைத்துக் கொண்டு செயற்கை உரத்தட்டுபாட்டை ஏற்படுத்துவதாகவும்,தட்டுபாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் அரசு அறிவித்த நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மேலும் உரத் தட்டுப்பாட்டை நீக்காவிட்டால் எதிர்வரும் விவசாய குறை தீர் கூட்டத்தை புறக்கணிக்க போவதாகவும் விவசாயிகள் எச்சரித்தனர். இந்த போராட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News