பெரம்பலூரில் கொரோனா தொற்று விபரம்

பெரம்பலூரில் கொரோனா தொற்றுக்கு 5 பேர் பாதிப்பு, மேலும் தொற்றில் இருந்து 12 பேர் குணமடைந்தனர்.

Update: 2021-04-18 15:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் கொரோனா நிலவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை ( பெரம்பலூர் - 935 பேர், வேப்பந்தட்டை - 469 பேர், வேப்பூர் - 558 பேர், ஆலத்தூர் - 436 பேர்) 2,398 பேர் இந்நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 2,314 பேர் குணமடைந்துள்ளனர் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்.18 இன்று பெரம்பலூரில் 04 பேருக்கும், ஆலத்தூரில் 01 பேருக்கும் தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 05 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 0 ஆகவும் உள்ளது. மேலும் தற்போது வரை சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பலூரில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை ( தனியார் மருத்துவமனை - 659, அரசு மருத்துவமனை - 24) 683 ஆகவும், இதுவரை 98,733 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News