100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சிலைகள் சேதம்

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சிலைகள் சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2021-07-03 13:01 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் எழுமூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அய்யனார் கோயிலில் உள்ள மதுரைவீரன், செல்லியம்மன், விநாயகர், தேசம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் எழுமூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கோயிலில் உள்ளது இந்த ஆயத்தில் மதுரைவீரன், செல்லியம்மன், விநாயகர், உட்பட்ட தெய்வங்களின் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளது.

நேற்று மாலை கிராம பொதுமக்கள் ஸ்ரீ அய்யனார் சாமியினை தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்ற போதுமக்கள் மேற்கண்ட சிலைகள் சேதம் அடைந்து காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தன். உடனே ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதிக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கோவிலுக்கு விரைந்து வந்து சேதமடைந்த சிலைகளைப் பற்றி இந்து அறநிலைதுறையினர். மற்றும் மங்களமேடு காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த இந்து அறநிலை துறையினர் எழுமூர் ஸ்ரீ அய்யனார் கோவிலுக்கு சென்று சேதம் அடைந்தது எப்படி என்று பல கோணத்தில் விசாரணை நடத்தினர். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலில் முதல் முறையாக சிலைகள் சேதமடைந்து கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.மேற்கண்ட செயல்களை செய்தவர்கள் யார் என்று காவல்துறையினர் கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News