பெரம்பலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-03 10:01 GMT

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரிமாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் 01.02.2022 முதல் நடைபெற்று வருகிறது. இம்முகாமானது 14.02.2022 வரை கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் தொடர்ந்து நடைபெறும். இந்த முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே அனைத்து கோழி வளர்ப்போர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News