பெரம்பலூரில் பஞ்சாப் முதல்வர் உருவ பொம்மை எரித்து பா.ஜ.க.வினர் போராட்டம்

பெரம்பலூரில் பஞ்சாப் முதல்வர் உருவ பொம்மையை எரித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-08 16:41 GMT
பெரம்பலூரில் பஞ்சாப் முதல்வர் உருவ படத்தை பா.ஜ.க.வினர் எரித்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகையில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தியதாகவும் , ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டதாகவும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து பெரம்பலூரில் . பாரதிய ஜனதா கட்சியினர் ஜனவரி - 8ம் தேதி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் காந்தி சிலை முன்பு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு, கையில் தீப்பந்தம் ஏந்தி முகத்தில் கருப்புத்துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பஞ்சாப் முதல்வர் புகைப்படம் மற்றும் உருவ பொம்மையை எரித்து. பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளா் வேலுசாமி. இளைஞா் அணி மாவட்ட தலைவா் சுரேஷ்குமாா் , பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினா் சதீஷ்குமாா் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மூர்த்தி, மனோஜ், சசிகுமார், கலியபெருமாள் மற்றும் ஒன்றிய தலைவா்கள் மற்றும் அணிபிரிவு தலைவா்கள் மற்றும் பல நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  உருவ பொம்மையை எரித்ததை பா.ஜ.க.வை சேர்ந்த 20 பேர் மீது 4 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News