சுதந்திரதிருநாள் அமுத பெருவிழா: தூய்மை, சுகாதார விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நவீன LED வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசார நிகழ்வை ஆட்சியர் துவக்கி வைத்தார்

Update: 2021-09-16 00:45 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் தூய்மைபாரதத்திட்ட விழிப்புணர்வு வாகனத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பி.ஸ்ரீவெங்கடப்பிரியா

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 15.09.2021 முதல் 02.10.2021 வரை சுதந்திர திருநாள் 75ஆம் ஆண்டை முன்னிட்டு "சுதந்திர திருநாள் அமுத பெருவிழா" எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து பொதுமக்களின் பங்கேற்புடன் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா"  விழிப்புணர்வு பிரசார நிகழ்வை மாவட்ட ஆட்சியர்  பி.ஸ்ரீவெங்கடப்பிரியா தொடக்கி வைத்து பேசியதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு, தூய்மை குறித்த உரையாடல், திரவக் கழிவு மேலாண்மை பற்றி 100 நாள் தூய்மை ரதம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல் மற்றும் தூய்மை சேவை உள்ளிட்ட  நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை விளம்பர  வாகனம் மூலம் கழிப்பறை பயன்பாடு, தன்சுத்தம், கிராம சுகாதாரம், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்கள் இன்று முதல் 02.10.2021 வரை கிராம ஊராட்சிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காண்பிக்கப்படும். பொதுமக்கள் இவ்விழிப்புணர்வு படங்களைக் கண்டு சுத்தம் மற்றும் சுகாதாரத்தினை கடைபிடித்து நோயற்ற பெருவாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்றார்  மாவட்ட ஆட்சியர்.

 ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. சீனிவாசன், உதவி திட்ட அலுவலர்கள் கீதாரத்தினம், கணபதி, விஜயலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் மற்றும் தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News