பெரம்பலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் மின்வாரிய அதிகாரி வீடு மற்றும் அவரது அம்மா வீடு என இரண்டு இடங்களில் சோதனை.

Update: 2021-07-23 12:00 GMT

பெரம்பலூர் மின்வாரியத்தில் மின்வாரிய உதவி செயற்பொறியாளராக இருப்பவர் மாணிக்கம். இவர் ஏற்கனவே லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால்  கையும் களவுமாக பிடிக்கட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அவரது வீடு மற்றும் அவரது அம்மா வீடு என இரண்டு இடங்களில் சோதனை  நடைபெற்று வருகிறது.

வெங்கடேசபுரத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் வீட்டில் அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் சோதனை நடைபெற்றுவருவதாக தெரிய வந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து விபரங்கள் அடங்கிய பட்டியலை காண்பித்து அதற்கான ஷோர்ஸ் என்னவென்று கேட்டு விசாரித்து வருகின்றனர். மாணிக்கத்தின் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல் வெண்பாவூர் கிராமத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் மாணிக்கத்தின் அம்மா வீட்டில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலிஸார் அதிரடியாக சோதனையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் ஏற்கனவே லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது வீட்டில் சோதனை நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News