பெரம்பலூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண் அடையாளம் தெரிந்தது

பெரம்பலூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண் அடையாளம் தெரிந்தது.

Update: 2022-03-08 10:41 GMT

அஞ்சலி.

பெரம்பலூர் மாவட்டம் வடக்குமாதவி சாலையில் சாமியப்பா நகர் 7வது குறுக்குத் தெருவில் செல்லமுத்து  என்பவருக்கு சொந்தமான  கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெயர் விலாசம் தெரியாத அடையாளம் தெரியாத  பெண் ஒருவர் இறந்துகிடந்துள்ளார்.

கிணற்றில் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து காவல்துறையும் தீயணைப்புத்துறையும் சம்பவ இடம் சென்று பார்த்த பொழுது  கிணற்றை சுற்றி முட்புதர்களும் குப்பை கூளமும் இருந்ததாலும் இரவு ஆகி விட்டதாலும் பிரேதத்தை வெளியே எடுக்க முடியவில்லை  என்றும் மறு நாள் காலை பிரேதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

அதன்படி இன்று  இறந்து போன நபரின் பிரேதத்தை தீயணைப்பு துறையினர்  கிணற்றிலிருந்து வெளியே எடுத்து மேற்கொண்டு விசாரணை செய்த பொழுது இறந்து போன நபர் அஞ்சலை (வயது 23 ), கணவர் பெயர் சுரேஷ்குமார், ஆர்.எம்.கே. நகர் எளம்பலூர் ரோடு, பெரம்பலூர் என விசாரணையில் தெரியவந்தது.

மேலும்  சுரேஷ்குமார்  04.03.22 ஆம் தேதி 09.30 மணிக்கு வீட்டில் இருந்த தனது மனைவியை காணவில்லை என பெரம்பலூர் காவல் நிலையத்தில் 5.3.22 ஆம் தேதி 12.30 மணிக்கு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.இறந்து போன அஞ்சலிக்கு  திருமணமாகி ஐந்து வருடம் ஆகிறது இவர்களுக்கு சிவன்யா (வயது 31/2 )என்ற மகளும் ஹரிஷ் வயது (1 1/2 )என்ற மகனும் உள்ளனர்.

சுரேஷ்குமார் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார்ங அவரின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் ஆகும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூருக்கு வந்துவிட்டனர். இறந்துபோன அஞ்சலையின் சொந்த ஊர்கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகும்.

அஞ்சலிக்கு மனநிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் கடந்த இரண்டு வருடங்களாக அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் காணாமல் போனதற்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அவர் சாப்பிட்டு வந்த மாத்திரைகள் தீர்ந்து போனதாலும் அதை வாங்குவதற்கு சுரேஷ்குமாரிடம் பணம் இல்லாத காரணத்தினாலும் 10 நாட்களாக மாத்திரை சாப்பிடாமல் இருந்துள்ளார். காணாமல் போன நாள் அன்று சுமார் 11மணியளவில் அஞ்சலை சாமியப்பா நகர் பகுதியில் இருக்கும் கிணற்றை நோக்கி தனியாக வேகமாக நடந்து செல்லும்பொழுது அங்கு வசிக்கும் வள்ளியம்மை  என்பவர் பார்த்து உள்ளார்.

எனவே அஞ்சலி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதா போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Tags:    

Similar News