தாய் சூடு வைத்ததால் 9 வயது சிறுமி உயிரிழப்பு: குழந்தைகள் நலஅலுவலர்கள் விசாரணை

மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவரும் வழக்கறிஞருமான அய்யம்பெருமாள் தலைமையில் 5 பேர் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2022-01-10 12:15 GMT

பெரம்பலூர் அருகே தாய் சூடு வைத்ததால் 9 வயது சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் குழந்தைகள் நலஅலுவலர்கள் நேரில் விசாரணை செய்தனர்.

பெரம்பலூர் அருகே தாய் சூடு வைத்ததால் 9 வயது சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் குழந்தைகள் நலஅலுவலர்கள் நேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி மகாலட்சுமி சூட்டு காயங்களுடன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.சம்பவம் நடந்து நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உறவினர் வீட்டில் சிறுமி 70 ரூபாய் திருடியதாகவும் அதனை கண்டிப்பதற்கு தாய் மணிமேகலை, உறவுக்கார பெண் மல்லிகா உதவியுடன் சிறுமியின் வாயிலும்,வலது தொடையிலும் சூடுவைத்தாக புகார் எழுந்தது.மேலும் சிறுமியை மிளகாய் புகையை முகரச்செய்ததாகவும் தகவல் வெளியானது.இதையடுத்து சிறுமியின் உயிரிழப்பை அரும்பாவூர் போலிஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து உறவுக்கார பெண் மல்லிகா என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.சூடு வைப்பதற்கு முன்பே சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என பெற்றோர் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.இந்த நிலையில் சிறுமியின் உடல் இன்று திருச்சி அரசுதலைமை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்படுகிறது.

இதனை வீடியோ பதிவுசெய்யுமாறும்,பெண்மருத்துவர் அடங்கிய மருத்துவக்குழுவினர் உடற்கூராய்வு செய்யுமாறும் பரிந்துரைக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாக காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் குழந்தைக நல அலுவலர் அருள்செல்வி சிறுயின் தாய் மற்றும் உறவினர்களிடையே விசாரணை செய்தார். .அதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியில் விசாரணையை துவக்கியுள்ளனர்.குழு தலைவரும் வழக்கறிஞருமான அய்யம்பெருமாள் தலைமையில் 5 பேர் குழுவினர் இன்று சிறுமியின் குடியிருப்பு பகுதியில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News