வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகை கொள்ளை

Update: 2021-03-28 07:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கை.களத்தூர் காலனி தெருவில் வசிக்கும் நந்திஷ் குமார் என்பவர் கடந்த மார்ச்.20 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தனது உறவினரது திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த சுமார் 35 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம் திருட்டு போயுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கைகளத்தூர் போலீசார் கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சம்பவ இடத்தை சோதனையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News