பெரம்பலூர் அருகே 2 வீடுகளில் நகை,பணம் கொள்ளை

Update: 2021-02-23 09:30 GMT

பெரம்பலூர் அருகே வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு விட்டு சுமார் 15 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமம் காந்தி நகரில் கணவனை பிரிந்து வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியை நவநீத பாலு மற்றும் அதன் அருகே உள்ள விவசாயி வீரபத்திரன் ஆகிய இரு வீடுகளில் நேற்று நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு சுமார் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து கொள்ளை தொடர்பாக விசாரணை செய்து வரும் மங்களமேடு காவல்துறையினர் வீட்டின் உரிமையாளர்களிடத்தில் கொள்ளை தொடர்பாக விசாரணை செய்ததில் இரவில் வந்த கொள்ளையர்கள் 4 பேரும் ஹிந்தி மொழியில் பேசியதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News