உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயினை பயோடீசலாக மாற்றும் திட்டம்.

உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயினை பயோடீசலாக மாற்றும் திட்டம்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா துவக்கி வைத்தார்

Update: 2021-07-02 18:08 GMT

பெரம்பலூரில் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயினை பயோ-டீசலாக மாற்றும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா (2.7.2021)   துவக்கி வைத்தார்.

உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பயோடீசல் ஆக மாற்றும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.

இதனை அடுத்து பெரம்பலூர் நகராட்சியில் இயங்குகின்ற உணவகங்களை சேர்ந்த உரிமையாளர்களிடம் பயன்படுத்தப்பட்ட எண்ணெயினை சேமிப்பதற்காக 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களை வழங்கி,அதற்கான வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 50 உணவகங்கள் மற்றும் இனிப்பு பாகங்களிலிருந்து பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கும் நடவடிக்கை முதல்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது.

இதில் 30 லிட்டர் வரை 25 ரூபாய் எனவும், 30 லிட்டருக்கு மேல் வழங்கும் நிறுவனத்திற்கு ரூபாய் 30 எனவும் விலை நிர்ணயம் செய்து உணவகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட உள்ளது, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், என நாலு மாவட்டத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சேர்த்து வைத்து சேமித்து வைக்கப்படுகிறது.

அதனை  நிலையம் பெங்களூரு ரூகோ சுத்திகரிப்பு  நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பயோ-டீசல் ஆக சுத்திகரிப்பு செய்து அது வாகன பயன்பாட்டிற்கு பிற எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பொதுமக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு அரசு மூலம் மேற்கொள்ளப்படும் இத் திட்டத்திற்கு உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News