நாமக்கல்லில் மீண்டும் சரிந்த முட்டை விலை

Update: 2021-01-09 04:45 GMT

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை உள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று 25 காசுகள் குறைந்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. கடந்த வாரங்களில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகளாக இருந்த நிலையில் பறவைக்காய்ச்சல் காரணமாக முட்டைகள் தேக்கமடைந்ததால் கடந்த நான்கு நாட்களில் 50 காசுகள் வரை குறைந்து இன்று 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், கேரளா மற்றும் வட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை எடுத்துச் செல்ல அம்மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஒரு கோடி முட்டைகள் தேக்கமடைந்ததாகவும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.முட்டை விலையை தொடர்ந்து இன்று கறிக்கோழி விலையும் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் குறைந்து ரூ 72 க்கு விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

Tags: