முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் எஸ்.பி ஆபீசில் புகார்

இந்து மதத்தைப் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Update: 2022-09-16 14:15 GMT

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ.ராசா இந்த மதத்தை குறித்து இழிவாக பேசியதாக ஊடகங்களில் வைரலானது. இது இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, மாநில பாஜ துணை தலைவரும், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளருமான வி.பி. துரைசாமி தலைமையில் திரளான பாஜகவினர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

மாவட்ட பாஜ தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் வடிவேல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் வடிவேல், வக்கீல் பிரிவு தலைவர் வேல்முருகன், செயலாளர் ஜோதிநாதன், சந்திரசேகரன், மோத்திநாதன் உள்ளிட்ட திரளான பாஜவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News