ராசிபுரம் தாலுகாவில் 6ம் நாள் ஜமாபந்தி: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

ராசிபுரம் தாலுகாவில் 6ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்றார்.

Update: 2024-06-20 12:27 GMT

ராசிபுரம் தாலுகா பொன்குறிச்சி கிராமத்தில், வேளாண்மைத்துறை சார்பில் கிடங்கு அமைப்பதற்கான இடத்தை, நாமக்கல் கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் 1433 பசலி ஆண்டுக்கான 6- ஆம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இன்று நடைபெற்ற 6- ஆம் நாள் ஜமாபந்தியில், கீரனூர், கொமாரபாளையம் குரூப், நடுப்பட்டி, ஓ.“வுதாபுரம், பழந்தின்னிப்பட்டி, கல்லாங்குளம் குரூப், ஆர்.புதுப்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, ஸ்மார்ட் ரேஷன் கார்டு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை பரிசீலத்து, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருவாய் தீர்வாயம் முடிவதற்குள் சம்மந்தப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த வருவாய் தீர்வாயத்தில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, பிறப்பு இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு, கிராம அ பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை தனித்தனியே பார்வையிட்டு கலெக்டர் சரிபார்த்தார். வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் வைத்துள்ள பதிவேடுகளில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுவதை கலந்தாலோசனைகள் மூலமாக உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், பொன்குறிச்சி ஊராட்சியில் வேளாண் இடு பொருள் கிடங்கு அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் நில அளவைத்துறை உதவி இயக்குநர் ஜெயசந்திரன், ராசிபுரம் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News