கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-06-17 15:46 GMT

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி ஜூன் 2024 மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.06.2024 வெள்ளிக்கிழமையன்று வெண்ணைமலையில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்துகொண்டு பணிவாய்ப்பினை பெறலாம்.

கரூர் மாவட்டத்தை சார்ந்த வேலைதேடும் இளைஞர்கள் தங்களுடைய கயவிவரகுறிப்பு உரியகல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 04324-223555 மற்றும் 9789123085 என்ற எண்களில் தொடர்புகொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News