உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பங்கேற்று ஆய்வு செய்தார்.

Update: 2024-06-19 15:41 GMT

அங்கன்வாடி மைய குழந்தைகளுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இன்று, கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் அரசு அலுவலர்கள் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

பொதுமக்களின் இடங்களுக்கே சென்று குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வுகாண, அரசு இயந்திரம் மக்களிடம் சென்று பணியாற்றும் உங்களைத் தேடி உங்கள் ஊரின் திட்டத்தில் கரூர் மாவட்டம். கடவூர் வட்டத்திற்குட்பட்ட 19 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகாண இருக்கின்றனர்.

கடவூர் வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள். கிராம நிர்வாக அலுவலகம். வட்டார பொது சுகாதார மையக் கட்டிடம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சத்துணவுக் கூடங்கள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். இது தொடர்பான ஆய்வுக்கூட்டம்-கலந்துரையாடல் நடைபெற்றது.

மாலையில் பொது மக்களுடனான கலந்துரையாடலும் மாலை 6 மணி முதல் தொடர்புடைய வட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தெருவிளக்குகளின் செயல்பாடுகள். பூங்காக்கள். நூலகங்கள், பேருந்து நிலையங்கள் அரசு விடுதிகள் பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

ஆய்விற்குச் செல்லும் அலுவலர்கள் அப்பகுதிகளில் தங்கி நாளைய தினம் அதிகாலை 6 மணி முதல் அவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள். பொதுப் போக்குவரத்துச் சேவை. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். பால் விநியோகம் குறித்தும் ஆய்வு சேய்ய உள்ளனர்.

காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தரம் குறித்து ஆய்வு செய்து பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் சேய் நலப்பெட்டகம் வழங்கப்பட்டது. காணியாளம்பட்டி ஊராட்சிப் பகுதியில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாரப் பொது சுகாதார மையம்- வரவனை கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு -பட்டாசிட்டா, பிறப்பு இறப்பு சான்றுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கடவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதிகள் சுகாதார வசதிகள், பள்ளி வளாக தூய்மை- மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறியப்பட்டது.

சீத்தப்பட்டடி ஊரட்சியில் உள்ள அங்கன்வாடி மையம், சிந்தாமணிபட்டி காவல் நிலையம், மயிலம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கடவூர் வட்டாட்சியர் அலுவலகம், தரகம்பட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடை, தரகம்பட்டியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.49.40 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், வனத்துறையின் மூலம் தரகம்பட்டியில் 2 ஏக்கர் பரப்பளவில் 12 ராசிக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மரகத பூஞ்சோலை, தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 32.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை, மதிய உணவின் தரம், நாகம்பட்டி ஆதிராவிடர் காலனியில் 15 ஆவது நிதி குழு மாநில திட்டத்தின் ரூ.7.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பொது மக்களுக்கு விரைந்து செயல்படுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கூட்டுறவு இணைபதிவாளர்.கந்தராஜா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மரு.சந்தோஷ்குமார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த சுமதி, சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன். உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News