காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மேனாக திமுகவை சேர்ந்த மலர் கொடி குமார்தேர்வு..

DMK Kodi-காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மேனாக திமுகவைச் சேர்ந்த மலர்கொடி குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2021-10-22 07:28 GMT

DMK Kodi

DMK Kodi-காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினெட்டு ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 18 ஒன்றிய கவன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

1வது வார்டு மோகனா இளஞ்செழியன், இரண்டாவது வார்டு வளர்மதி, நாலாவது வார்டு பாலாஜி, 5வது வார்டு ஆதிலட்சுமி, 6வது வார்டு ராம்பிரசாத், 7வது வார்டு ஹேமலதா, 9-வது வார்டு மலர்கொடி, 10வது வார்டு கோடீஸ்வரி, 12வது வார்டு ரேகா, 13வது வார்டு தேவபாலன், 14வது வார்டு. 8வது வார்டு வேட்பாளர் விமல்ராஜ், 15வது வார்டு வேட்பாளர் பேபி சசிகலா 3வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் உள்ளிட்ட 18 ஒன்றிய கவுன்சிலர்கள் கடந்த 20ம் தேதி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் இன்று காலை காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 9வது வார்டு திமுக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட மலர்கொடி குமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மலர் கொடி குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Similar News