சாலையில் பசி மயக்கத்தில் விழுந்த வாலிபர் : உணவளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சாலையில் பசி மயக்கத்தில் விழுந்த வாலிபரை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீட்டு உணவளித்தார்.

Update: 2021-12-26 12:30 GMT

சாலையில் மயங்கி விழுந்த இளைஞரை அமைச்சர் அன்பரசன் மீட்டு உணவளித்தார்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதிகளை இன்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் , கீழம்பி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை செல்ல கீழம்பி வழியாக அரக்கோணம் சாலையில் சென்றபோது திம்மசமுத்திரம் பகுதியில் அமைச்சரின் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே சாலையில் வந்த  25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார் .

இதைக் கண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடனடியாக காரில் இருந்து இறங்கி  அவனை மீட்டு தண்ணீர் குடிக்க வைத்து  மெல்ல விசாரித்தபோது கடந்த இரு தினங்களாக உணவு அருந்தவில்லை என்பதால் மயங்கிிக் கீழே விழுந்ததா தெரியவந்தது.

உடனடியாக அவரது உதவியாளரை அழைத்து வாகனத்தில் இருந்த பிஸ்கட் மற்றும் குடிநீர் அளித்தும் அப்பகுதிகளில் உள்ள திமுக பிரமுகரை அழைத்து உடனடியாக அவருக்கு உணவு அளித்து உரிய இடத்தில் அவரை சேர்க்குமாறு அறிவுறுத்தினார்.

மயங்கி விழுந்தவரை  உடனடியாக அமைச்சர் என்றும் பாராமல் அவரின் நலன் கருதி வாலிபருக்கு உதவிய நிகழ்வைப் பார்த்த அப்பகுதி மக்கள் அமைச்சரின் மனித நேய செயலைப் பாராட்டினர்.

Tags:    

Similar News