காஞ்சிபுரத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

World No Tobacco Day Awareness Rally- காஞ்சிபுரம் மாவட்ட பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Update: 2022-05-31 05:00 GMT

உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று மே 31 உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட  இந்திய பல் மருத்துவச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை சிவ காஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் வினாயகம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த பேரணி ராஜ வீதி, ரயில்வே சாலை உள்ளிட்ட காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக வந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவுபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் புகையிலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும்,  துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர். விழிப்புணர்வு பேரணியில் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இந்திய பல் மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை தலைவர் டாக்டர்.வித்யா தேவராஜன், செயலாளர் டாக்டர் N.சரவணன்,பொருளாளர் டாக்டர்.ஜெயந்தா பத்மநாபன், முகாம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரியா பாலா, இணைச் செயலாளர் டாக்டர்.V.Kஜெயகரன், முன்னாள் தலைவர் டாக்டர்.P.சதீஷ்குமார்,முன்னாள் செயலாளர் டாக்டர்.S.R.கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News