மலை போல் குவிக்கப்பட்ட பழங்கள: அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு.

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் குளிர்பானங்கள், பழங்கள் என குவிக்கப்பட்டிருந்தது

Update: 2023-04-29 09:15 GMT

காஞ்சிபுரம் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் திறந்து வைத்த போது 

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெப்பம் அனல் காற்றுடன் வீசி வருகிறது. இதிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள பல்வேறு பாதுகாப்பு அறிவுரைகளை மருத்துவர் மட்டும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரையின் பேரில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு குளிர்ந்த பழரச பானங்களை வழங்க அறிவுறுத்தி இருந்தார்.

அவ்வகையில் கடந்த 15 நாட்களாகவே காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பழரசங்கள், பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி ஆர் மணிவண்ணன் ஏற்பாட்டின் பேரில் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே இன்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சுமார் 75 அடி நீளமுள்ள பந்தல் அமைக்கப்பட்டு அதில் தள்ளுவண்டிகளில் வெள்ளரிபழம் , தர்பூசணி, அண்ணாசி, மாம்பழம், இளநீர், நுங்கு, மோர், கரும்பு ஜூஸ், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குளிர் பானங்கள், பழங்கள், குவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க இருந்தது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழரசங்கள் வழங்கினர்.


சிறிது மணித்துளிகளே பொதுமக்களுக்கு வழங்கிய நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் கைகளில் கிடைத்தவைகளை அள்ளி வாரி அணைத்து கொண்டு முண்டியடித்து சென்றனர்.

திறந்த ஐந்தே நிமிடத்தில் அனைத்தும் அள்ளிவாரி சென்ற இடம் முழுவதும் காலியாக கிடந்தது. விருந்தினர்களே அவ்விடத்திலிருந்து செல்லாத நிலையில் முற்றிலும் காலியானது அதிர்ச்சியை அளித்தது.

திருக்கோயில் அருகே என்பதாலும் பக்தர்கள் அதிகளவில் வந்து பழங்களை எடுத்து சென்றனர்

Tags:    

Similar News