உள்ளாட்சி தேர்தலில் பணமழையில் வாக்காளர்கள், பறக்கும் படை கண்துடைப்பா

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அதிக அளவில் பணம் வழங்கினர். விழிப்புணர்வு , பறக்கும் படை‌ அனைத்தும் செயலிழந்து விட்டதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Update: 2021-10-10 08:45 GMT

பைல் படம்

கிராம வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கான அமைப்பை உருவாக்க நேர்மையான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அதற்கான தேர்தல் விதிகளை  உலகிற்கு எடுத்துரைத்த உத்திரமேரூர் கல்வெட்டு கொண்ட  புகழ்பெற்ற  மாவட்டம் என பெயர் பெற்றது காஞ்சிபுரம் மாவட்டம்.

இங்கு  தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களை பணமழை மற்றும் மதுபோதையில் திளைக்க வைத்தனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு நபர்கள் கூட குறைந்தபட்சம் ஐநூறு விருந்து  ஆயிரம் வரை வாக்குக்கு பணம் அளித்தனர்.

இதற்கு ஓருபடிமேலாக கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை வழங்கியுள்ளனர்.

தொழிற்சாலை , கல்குவாரிகள், வீட்டு மனை திட்டங்கள்  என பல வகைகளில் வருமானம் என எண்ணி பலர் சொந்த வீடுகளை அடமானம் வைத்து  இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளித்துள்ளனர்.

இதுதவிர பெண்களை கவர சிறிய வகை தங்க ஆபரணங்கள் , பணம் , ஆண்களை கவர மதுவகைகள் என பலவகைகளில் ஜனநாயகம் பணநாயகமாகியது.

இதையெல்லாம் தேர்தலில் கட்டுப்படுத்தப்படும் என தேர்தலுக்கு தேர்தல் கூறுவது வழக்கமாகிவிட்டது. பறக்கும்படை , வாக்கிற்கு பணம் வாங்கமாட்டோம் என விழிப்புணர்வுகள்‌ இவை எல்லாம் வீண்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் ‌‌ நிஜங்களாகவே கண் முன் தெரிகிறது.

கடந்த நாடாளுமன்ற ,  சட்டமன்ற தேர்தலின் போதுகூட மாற்றம் காணுவோம் என வீறுகொண்டு எழுந்த இளைஞர்கள் கூட இந்த உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளரிடம் மண்டியிட செய்ய வைத்தது இவர்களின் வீர ஆவேச பேச்சு..

இவை அனைத்தும் ஒருவரிடம் பெற்றபின் கிராம வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்பது வருங்காலங்களில் தெரியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags: