வாக்காளர் சிறப்பு முகாம் தேதி மாற்றம்: மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

18 மற்றும் 19 ம் ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்களின் தேதிகள் மாற்றப்பட்டு, வரும் 25 , 26 ஆகிய நாட்களில் நடைபெறும். .

Update: 2023-11-16 11:30 GMT

கீழ்கதிர்பூர் ஊராட்சியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் புதிய வாக்காளராக இணைக்க விண்ணப்பம் அளித்த இளம் பெண் ( கோப்புப் படம்)

வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம் குறித்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தாவது, 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், 2024ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்க, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், 04-11-2023, 05-11-2023, 18-11-2023 மற்றும் 19-11-2023 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்த அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  தமிழக அரசால் வரும் 18-11-2023 -ம் நாள்பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 18-11-2023 மற்றும் 19-11-2023 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்களின் தேதிகள் மாற்றப்பட்டு, வரும் 25-11-2023 மற்றும் 26-11-2023 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இம்முகாம்களில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளவும், புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.

Tags:    

Similar News