பிரம்மோற்சவம் 6ம் நாள் விழா: வேணுகோபால் சுவாமி அலங்காரத்தில் வீதியுலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-06-05 11:30 GMT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ஆறாம் நாள் வேணுகோபால சுவாமி அலங்காரத்தில்  வரதராஜர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் விழாவில் வேணுகோபால சுவாமி திருக்கோலத்தில் வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அத்திகிரி வரதர் என அழைக்கப்படும் ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கடந்த 31 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் மாநகர் வீதியில் வலம் வந்து அருள் பாலித்து வருகிறார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தங்க கருட வாகனத்தில் வரதராஜர் எழுந்தருளிய போது லட்சக்கணக்கான மக்கள் மாநகர் வீதியில் கூடி வரதராஜ பெருமாளை தரிசித்து அவரது அருளை பெற்று சென்றனர். இதனை அடுத்து ஏழாம் நாள் திருத்தேர் உற்சவத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வும் நடைபெற உள்ளது

வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாள் நிகழ்வில் வேணுகோபால்சாமி அலங்காரத்தில் புல்லாங்குழல் காமதேனுடன் வீதி உலா எழுந்தருளிய போது.

இந்நிலையில் , இன்று ஆறாம் நாள் காலை வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வேணுகோபால் சுவாமி திருக்கோளத்தில் மல்லிகை மனோரஞ்சிதம் உள்ளிட்ட மாலைகளை கைகளில் சூடி ,  கையில் புல்லாங்குழல் , காமதேனு உடன் அலங்கரிக்கப்பட்ட தங்க சப்பர வாகனத்தில் காஞ்சிபுரம் மாநகர் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் யானை வாகனத்தில் காஞ்சிபுரம் மாநகர் வீதியில் வலம் வர உள்ளார். தற்போது காஞ்சிபுரத்தில் மழை பெய்து வருவதால் வாகன புறப்பாடு சிறிது நேரம் தள்ளி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது

நாளை அதிகாலை ஆறு மணி அளவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அதிகாலை 2 மணி அளவில் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு திருத்தேர் அமைந்துள்ள தேரடி பகுதியில் எழுந்தருளி அதன்பின் சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரில் அமர்ந்து வலம் வருவார்.

இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது பணி ஒதுக்கப்பட்டு போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News