ஆவுடைநாயகி சமேத கடம்பநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பணி தொடங்கியது

கடம்பநாதசுவாமி கோயிலில் சுமார் 33 இலட்சம் மதிப்பிலான திருப்பணியினை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்

Update: 2022-03-27 04:45 GMT

 உத்தரமேரூர் அருகே கடம்பர் கோயில் ஆவுடையநாயகி கோயிலில் புனித நீர் கொண்டு பாலாலயம் வழிபாடு செய்த போது

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் ஆதவபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பர் கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற ஸ்ரீ ஆவுடை நாயகி சமேத மேகநாதசுவாமி திருக்கோயில்.

காசிக்கு நிகராக போற்றப்படும் இத்திருக்கோயில் மூன்றடுக்கு ராஜகோபுரத்துடன் அழகிய செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்நிலையில் உத்தரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட கடம்பர் கோயில் ,  கருவேப்பம்பூண்டி பெருங்கோழி தம்மனூர்,  அழிசூர் ,  காட்டான்குளம் உள்ளிட்ட10 க்கும்  மேற்பட்ட திருக்கோயில்கள் திருப்பணி செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்து அதற்கான பணிகளை துவங்கியது.

அவ்வகையில் முதல் திருக்கோயிலாக ஸ்ரீ கடம்பநாத சுவாமி திருக்கோயிலுக்கு இன்று குடமுழுக்கு திருப்பணி என கூறப்படும் பாலாலயம் விழா காலை 7 மணிக்கு சிவாச்சாரியர் கண்ணன் குருக்கள் தலைமையில் துவங்கியது. சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று பூரணஹதி நடைபெற்ற சிறப்பு புனித நீரால் பாலாலய உருவங்களுக்கு நீர் ஊற்றப்பட்டது அதன்பின் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராஜசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.திருப்பணி துவக்க விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானங்கள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் உத்தரமேரூர் ஒன்றிய திமுக செயலாளர் ஞானசேகரன் உத்திரமேரூர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஸ்ரீமதி செயல் அலுவலர் செந்தில்குமார் கோ ஸ்ரீதரன் உத்தரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News