அறிவித்த தடுப்பணைகளை கட்ட விரைந்து நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-29 05:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கான மாதாந்திர நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கான மாதாந்திர நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் கோல்டன் பிரேமாவதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு நடப்பு பருவம், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உரம் இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதன் பின் கடந்த மாதம் விவசாயிகள் கொடுக்கப்பட்ட 74 குறை மனுக்களை பரிசீலனை செய்து அதற்கான விளக்கங்கள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் விவசாயிகள் குறைகளை தெரிவிக்கையில், தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள காலத்தில் தற்போது ஏரிகள் நிரம்பி உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பி நீர் வீணாக கடலில் சென்று சேர்கிறது

இதனை தவிர்க்கும் பொருட்டு கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணைகள் குறித்து அளிக்கப்பட்ட உறுதிகளை நிறைவேற்றும் வகையில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் , வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News