நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் 156 பதவிக்கு 1001 பேர் மனுதாக்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 பதவிகளுக்கு ஆயிரத்து ஓர் நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளதாக தேர்தல் அலுவலர் தகவல்.

Update: 2022-02-04 14:00 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 2 நகராட்சிகள் 3 பேரூர் பேரூராட்சி களுக்கான புற உள்ளாட்சித் தேர்தல்  வாக்குப்பதிவு பிளவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் போட்டியிடும் நபர்களிடமிருந்து வேட்பு மனு கடந்த வெள்ளிகிழமை முதல் இன்று மாலை 5 மணி வரை பெறப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 156 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1001 நபர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 409 நபர்களும், குன்றத்தூர் நகராட்சியில் 164 நபர்களும்,  மாங்காடு நகராட்சியில் 163 நபர்களும், வாலாஜாபாத் பேரூராட்சியில் 84 நபர்களும் ,  உத்திரமேரூர் பேரூராட்சியில் 75 நபர்கள், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 106 நபர்களும் என மொத்தம் 1001 நபர்கள்  மனுதாக்கல் செய்துள்ளனர்.

இன்று மட்டும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 229 நபர்கள்,  குறைந்தபட்சமாக உத்திரமேரூர் பேரூராட்சி 22 நபர்களும் வேட்பு தாக்கல் மனு செய்துள்ளனர்.

Tags:    

Similar News