மின்சார வயர் அறுந்து விழுந்ததால் ரயில் சேவை இரண்டு மணி நேரம் பாதிப்பு

மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்ததால் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது

Update: 2023-04-21 13:00 GMT

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே ரயில்வே மின்சார ஒயர் அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே ரயில்வே மின் ஒயர் அறுந்ததால் காஞ்சிபுரம் கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கபட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டு சேவை தொடங்கப்பட்டது.

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம்,  செங்கல்பட்டு , சென்னை கடற்கரை வரை நாள்தோறும் பயணிகள் ரயில் இயங்கி வருகிறது.இதில் சென்னையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள்,  தொழில்நுட்ப பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மருத்துவ சேவைக்காக மூத்த குடிமக்கள் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் என ஆயிர கணக்கில் நாள்தோறும் காஞ்சிபுரத்திலிருந்து பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே உள்ள பரஞ்சோதி அம்மன் கோயில் எதிரில் மின்சார ரயில் ஒயர் மாலை 4 மணியளவில் திடீரென அறுந்து விழுந்ததால் காஞ்சிபுரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் பாலூர் அருகே நிறுத்தப்பட்டது. மேலும் பல ஆயிரம் வோல்ட் மின்சாரம்  செல்லும் கம்பி என்பதால். தகவல் அறிந்த ரயில்வே துறையினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்ததால் நல்வாய்ப்பாக எவ்வித பாதிப்பும் இல்லை.

இதுகுறித்து செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் கோட்ட ரயில்வே அலுவலங்களுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில்   சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பணிகளை விரைவாக மேற்கொண்டு அறுந்து விழுந்த மின்சார  வயரை மாற்றி மீண்டும் சேவை வேகன் மூலம் சரி  பார்த்தனர்

மின் ஒயர் அறுந்த தகவல்  கடற்கரை காஞ்சிபுரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மாற்று வழியாக பேருந்தில் செங்கல்பட்டில் இருந்து வர வேண்டுமென ரயில்வே பயணிகள் வாட்ஸ் அப் குழுவில் பதிவிடப்பட்டது. இதையடுத்து பணிகள் முடிந்து சீரமைக்கப்பட்ட பின்னர், பாலுரிலிருந்து மின்சார ரயில் காஞ்சிபுரம் வந்தடைந்தது  இத்த தகவலும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் சுமார் இரண்டு மணி நேரம் காஞ்சிபுரம் செங்கல்பட்டு அரக்கோணம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மேலும் கூடுதல் பணிகளை இன்று இரவு சரி செய்து முழு பணியை நிறைவு செய்ய உள்ளதாக ரயில்வே புணரமைப்பு நிர்வாக குழு தெரிவித்தது.


Tags:    

Similar News