காஞ்சிபுரத்தில் மூன்றாம் பாலினத்தவர் வாழ்வாதாரத்தை வளமாக்க ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரத்தில் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை வளமாக்க கலெக்டர் ஆர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-16 13:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாம பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை வளமாக்க கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலின நபர்களுக்கு மின்னணு குடும்பஅட்டை ,  ஆதார் அட்டை பெற சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினர் கலந்து கொண்டனர் அதன்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ஆர்த்தி  தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை வளமாக்கும் வகையில் அவர்களுக்கு சுயதொழில் தொடங்க வழிவகை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர் உடன் இணைந்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் சங்கீதா , மாவட்ட ஊரக வளர்ச்சி‌ முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா , மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாச ராவ் மற்றும் ஏராளமான மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News