தபால் வாக்கே திமுக ஆட்சிக்கு வரக் காரணம் - அரசு ஊழியர் சங்க நிர்வாகி தடாலடி பேச்சு

இன்னும் யார் யாரெல்லாம் திமுக வெற்றிக்கு தாங்கள் தான் காரணம் என கூறபோகிறார்களே -கழக கண்மணிகள் வேதனை

Update: 2021-08-16 15:15 GMT

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக பெரும்பான்மை பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. பல இடங்களில் திமுக வெற்றிக்காக கடும் போராட்டங்களை சந்தித்து கடைசியில் சில ஆயிரங்களில் முன்னிலை பெற்றது. சில இடங்களில் தபால் வாக்கில் தான் முன்னிலை பெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதபோதகர் ஓருவர் திமுக ஆட்சிக்கு வர நம்மை போன்று சிறுபான்மை இன மக்கள் வாக்கு அளித்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வைத்தோம் என்பதை திமுக அரசு ஒருபோதும் மறக்கக் கூடாது என தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். தற்போது 100 நாள் கடந்து அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாக வில்லை.

அடுத்த ஆண்டு இறுதியில் தான் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என தகவல் வெளியாகியது. இதைக் கண்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தமிழக அரசு தங்களை ஏமாற்றி விட்டதாகவும் இதற்காக ஆயிரம் இடங்களில் இன்று போராட்டம் நடைபெறும் என ஒரு சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் லெனின் பேசுகையில், தபால் வாக்குகளே திமுக வெற்றிக்கு வழி வகுத்ததாகவும், அதற்கு அரசு ஊழியர்கள் வாக்களித்தே காரணம் எனவும் அதற்கு உதாரணம் அமைச்சர் துரைமுருகன் எனவும் கூட்டத்தில் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு ஊழியர்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைத்து விட்டால், உடனடியாக மாற்றத்தை காண முடியும் எனவும் எச்சரித்தார். இனிவரும் காலங்களில் யார் யாரெல்லாம் திமுக வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் என வெளிப்படையாக கூறுவார்களோ என கழக கண்மணிகள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.

Tags:    

Similar News