குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களுக்கு இலவச மோர் வழங்கிய மாநகராட்சி

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளிக்க வரும் மக்களுக்கு குடிநீர் மற்றும் மோர் இலவசமாக வழங்கப்படுகிறது.

Update: 2022-05-09 08:00 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்ட இலவச மோரை பருகும் பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் வருவாய்த்துறை,  மின்சாரம் மற்றும் கிராம வளர்ச்சி பணிகள் , ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து  பொதுமக்கள் மனு அளிப்பது வழக்கம்.

இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு  நூற்றுக்கணக்கான மனுக்கள் வருவது வழக்கம். தற்போது கோடை கத்திரி வெயில் துவங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு உடல் வெப்பத்தை தணிக்கும் வகையில் சுகாதாரமான குடிநீர் மற்றும் மோர் வழங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடப்பட்டது.

இப்பணியினை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் மாநகராட்சிக்கு அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும் இடம் அருகே மனு அளிக்க வந்த பொது மக்களுக்கு மோர் மற்றும் குடிநீர் இலவசமாக அளிக்கப்பட்டது.

இச்செயலை மனு அளிக்க வந்த அனைத்து பொதுமக்களும் , அரசு அலுவலர்களும் வரவேற்றனர்.

Tags:    

Similar News