நீரில் மிதந்து யோகா செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற டாஸ்மாக் ஊழியர்

டாஸ்மாக் விற்பனை கண்காணிப்பாளர் யோகா பயிற்சியாளருமான ஜெ.நிர்மல்குமார் கடந்த 2 மாதமாக கடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்

Update: 2022-09-25 06:00 GMT

 காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு நீச்சல் அரங்கத்தில் நீரில் மிதந்த படி சாதனை மேற்கொண்டு தனியார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஜெ.நிர்மல் குமார்

காஞ்சிபுரம், திருக்காளிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெ.நிர்மல்குமார். இவர் டாஸ்மாக் ஊழியராகவும் , சஹானா யோகா மையம் நிறுவி அதன் மூலம் அப்பகுதியில் இலவசமாக அனைத்து வயது தரப்பு பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் கடந்த இரண்டு மாத காலமாக நீரில் மிதந்த படி பல்வேறு யோகாசனங்களை செய்யும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.இன்று அதிக நேரம் நீரில் மிதந்தபடியே பல்வேறு யோகாசனங்களை மேற்கொண்டு தனியார் அமைப்பு சார்பில் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெரும் நோக்கில் காலை 7 மணி முதல் நீரில் மிதக்கும் சாதனை நிகழ்வினை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் தொடக்கி வைத்தார்.

அரசு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு மைய நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் ஆலோசனையில் இந்நிகழ்வை ஆரம்பித்து பத்மாசனம் உள்ளிட்ட 15 ஆசனங்கள் மூலம் நீச்சல் குளத்தில் மிதந்தபடி செய்து காட்டினர்.தொடர்ந்து 3 மணி 04 நிமிடங்கள் 25 நொடிகள் மிதந்து சாதனை புரிந்து தனியார் நோபள்‌உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். முந்தைய சாதனை 1மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் கடும் பயிற்சி மூலம் இந்த அளப்பரிய சாதனை மை செய்துள்ளார் ஜெ.நிர்மல் குமார்.இவரது சாதனையை இவரது குடும்பத்தார் மற்றும் சுறா நீச்சல் பயிற்சி மைய தலைவர் சாந்தாராம், நிர்வாகிகள் , நீச்சல் பயிற்சி வீரர் வீராங்கனைகள் என பல தரப்பினரும் இவரது சாதனையை பாராட்டினர்.


Tags:    

Similar News