காஞ்சிபுரத்தில் ராஜமன்னார் திருக்கோலத்தில் சேவை சாதித்த ஸ்ரீ கிருஷ்ணர்

காஞ்சிபுரம் பாண்டவர் பெருமாள் கோயில் வடக்கு மாடவீதியில் நடைபெறும் ஸ்ரீ கண்ணன் அவதார விழா 6ம் நாளில் ராஜமன்னார் திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

Update: 2021-09-05 16:45 GMT

ராஜமன்னார் அலங்காரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பெரிய காஞ்சிபுரம் பாண்டவதூத பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த  ஸ்ரீ வேணுகோபால பஜனை மந்திரம்.

இங்கு வருடந்தோரும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி 16 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பதினாறு நாட்களில் ஸ்ரீ கிருஷ்ணன் தினமும் பல்வேறு அலஙகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

இந்த வருடத்திற்குரிய ஸ்ரீ கண்ணன் அவதார உற்சவ திருவிழா கடந்த 31ஆம் தேதி துவங்கி வரும் 15ஆம் தேதி புஷ்ப யாகம் காட்சியுடன் நிறைவு பெறுகிறது.

 ஆறாம் திருநாளான இன்று ஸ்ரீ கிருஷ்ணர் ராஜமன்னார் அலங்காரத்தில் பஜனை மண்டபத்தில் எழுந்தருளினார். இவருக்கு பக்தர்களால்  பெரியாழ்வார் திருமொழி 1ம் பத்து பாசுரம்,  பெரிய திருமொழி மூன்றாம் பத்து பாசுரம்,  திருவாய் மொழி  10 ஆகிய திவ்யபிரபந்த சேவை கண்டருளினார்

இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின் பக்தர்களுக்கு  துளசி தீர்த்தம், மஞ்சள்,சடாரி சாற்று முறைநடைபெற்றது.

அதன்பின் ஸ்ரீ கண்ணன் அவதார விழா வில் கலந்து கொண்ட அனைவருக்கும் புளியோதரை , கேசரி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News