திருநங்கைகள் ரேஷன் கார்டு பெற சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை பெறாத திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2022-01-08 08:00 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநங்கைகள் ரேஷன் கார்டு கேட்டு இன்று நடந்த சிறப்பு முகாமில் மனு அளித்தனர்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு , எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவருக்கும் அனைத்து பொருளும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை தரம்பிரித்து வாரம் தோறும் 7 நாட்கள் ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வளத்தோட்டம், செரப்பனஞ்சேரி, பூக்கடை சத்திரம் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே நலவாரிய அட்டை ஆதார் அட்டை உள்ளிட்டவை பெற்றிருந்தாலும் பலருக்கு ரேஷன் அட்டை இல்லை என்பதால் பொருட்கள் பெற இயலவில்லை எனவும் அரசு வழங்கும் நல திட்டங்களும் தங்களுக்கு கிடைப்பதில்லை என புகார் தெரிவித்து வந்தனர்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வழங்குதல் சம்பந்தமான கோரிக்கை மனு பெறப்பட்டது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை வழங்குதல் தொடர்பாக தனி வட்டாட்சியர் திரு வாசுதேவன் தலைமையிலான குழுவினர் இன்று சுமார் 20 திருநங்கைகளிடம் இருந்து குடும்ப அட்டை கோரி மனு அளித்தனர்.

இம்முகாமில் திருநங்கைகள் கலந்து கொண்டு குடும்ப அட்டை கோரி அத்தாட்சிகள் உடன் மனு அளித்தனர். இவர்களுக்கு உதவியாக களப்பணியாளர்கள்  ஜானகி, .தானியா உள்ளிட்டோர் உடனிருந்து உதவினர்.

Tags:    

Similar News