செவிலிமேடு பாலாற்று மேம்பாலம் சேதம் அறிந்த ஆட்சியர், எஸ்.பி ஆய்வு

Bridge Damage -கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்று மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்த நிலையில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-11-10 06:30 GMT

செவிலிமேடு பாலாற்று மேம்பாலம் இருக்கும் இணைப்பு பகுதிகள் மிகவும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் பயணிப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் , எஸ். பி அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது

Bridge Damage -செவிலிமேடு பாலாற்று மேம்பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் வாகனங்கள் குறித்த அறிந்த மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி , எஸ்பி எம்.சுதாகர் சம்பவ இடங்களில் விரைவாக சென்று  ஆய்வு மேற்கொண்டு விரைவாக சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்க உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் பாலாற்றின் குறுக்கே கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி காரணமாக தரைப்பாலும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.

இச்சாலை வழியாக செய்யாறு வந்தவாசி திண்டிவனம் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்தும் , மாங்கால் கூட்டு சாலையில் அமைந்துள்ள சிப்காட் பகுதிக்கு தொழிற்சாலை பேருந்துகளும் , இது மட்டுமல்லாமல் பகுதியில் இயங்கும் கல்குவாரி தொழிற்சாலை கனரக வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரம் நோக்கி அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனம் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இதில் பயணிக்கும்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுகளாகவே பாலத்தில் சாலை பகுதியில் அதிகளவு பள்ளங்கள் ஏற்படுவதாகும் , அதில் உள்ள காங்கிரிட் கம்பிகள் வெளியே தெரிவதாகும் புகாரின் அடிப்படையில் அதனை நெடுஞ்சாலைத்துறை அவ்வப்போது சரி செய்யும்.

இந்நிலையில் தற்போது இரண்டு தூண்களின் இணைப்பு பகுதியில் பெரும் விரிசல் கண்டு இரும்பு பார் அனைத்தும் ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்லும் நிலையில், இது போன்ற பகுதிகளில் சிக்கி வாகன விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

தற்போது பாலத்தின் நடு மையப் பகுதியில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்ததின் பேரில் ஆட்சியர் மா .ஆர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் ஆகியோர் மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அதிக பள்ளம் ஏற்பட்ட பகுதியில் ஏற்படும் அதிர்வுகள் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சுறுவதாகவும் இதனை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

பணிகள் நடைபெறும் வரை காவலர்கள் மற்றும் எச்சரிக்கை பலகை வைத்து எச்சரிக்கவும் அறிவுறுத்தினார்.

தற்போது சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் நாட்களில் கன மழை பெய்யும் என எச்சரித்துள்ள நிலையில் உடனடியாக மழை துவங்கும் முன்பே இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாள்தோறும் விபத்துக்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது இதற்கு முயற்சி எடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தின் செயலை வரவேண்டும் இதனை தரமான முறையில் முழுமையாக பழுது மிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே சேதம் அடைந்த தரப்பாலத்தை புதுப்பித்து கனரக வாகனங்கள் செல்ல அதில் அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News