கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரி 3 மணிக்கு திறப்பு

Chembarambakkam Lake Water Level Today in Tamil -காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதால், 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Update: 2022-11-02 04:30 GMT

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி

Chembarambakkam Lake Water Level Today in Tamil -வடகிழக்கு பருவ மழை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவங்கியது. தமிழகத்தில் 13க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த இரண்டு தினங்களாக கன மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.கன மழை பெய்து வருவதால், கடந்த இரண்டு நாட்களாக   பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை  விடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு தொடங்கி, தற்போது வரை தொடர் மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கா வண்ணம், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில், நேற்று காலை 2675 மில்லியன் கன அடியாக இருந்தது ஒரே நாளில் 90 மில்லியன் உயர்ந்து, தற்போது 2765 மில்லியனாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியான திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பொய்து வருவதால், நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 21.20 அடியில் தற்போது 18.42 அடி நிரம்பியுள்ளது .வினாடிக்கு 1997 கன அடி நீர் வரத்தும்,  192 அடி  குடிநீர் உள்ளிட்டவைகளுக்காக பணிகளுக்காக வெளியேற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகள் முழு கொள்ளளவையும் 24 ஏரிகள் 75 சதவீத  கொள்ளளவு எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கத்தில் 95 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 90 மில்லி மீட்டரும் ஸ்ரீபெரும்புதூரில் 91 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் 71 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில், தொடர்ந்து கன மழை பெய்து வருவதும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகம் வருவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீர் நீர் திறப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் ஏழு ஏரிகள் முழு கொள்ளளவு 13 ஏரிகள் 75% கொள்ளவையும் எட்டியுள்ளது. இந்நிலையில் இன்றும் , நாளையும் மழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மாவட்ட தோறும் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொழிற்சாலைகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. மாவட்ட பேரிடர் கால மையத்தில் 24 மணி நேரமும் பணிபுரிந்து மாவட்ட நிலவரத்தை  கண்காணித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News