உரிமை கோராத பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள்‌ ரூ 1.11கோடிக்கு ஏலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 1896 வாகனங்கள் ரூபாய் 1,11,29,624க்கு ஏலம் போனதாக போலீஸ் எஸ்பி சுதாகர் தெரிவித்தார்.

Update: 2022-01-10 08:30 GMT

காஞ்சிபுரத்தில் உரிமைக் கோரப்படாத வாகனங்கள்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்பேரில் காவல் நிலையத்தில் உள்ள உரிமை கோரப்படாத வாகனங்கள, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்களை இரண்டு மாதத்திற்குள் அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பொது ஏலம் நடத்தி அரசு கணக்கில் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 காவல் நிலையங்களில் உள்ள எவரும் உரிமை கோரப்படாத மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கணக்கிடப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .M.சுதாகர் பரிந்துரையின் பேரிலும் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி உத்திரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு மேற்படி வாகனங்களை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு பின்னர்

1 ) நேர்முக உதவியாளர், பொது, மாவட்ட ஆட்சியர்,

2 ) வருவாய் கோட்டாட்சியர், காஞ்சிபுரம்,

3 ) காவல் துணை கண்காணிப்பாளர், ஆயுதப்படை, காஞ்சிபுரம்,

4 ) வட்டாட்சியர், காஞ்சிபுரம்,

5 ) தானியங்கி மேற்பொறியாளர்,

6 ) மோட்டார் வாகன ஆய்வாளர்

 ஆகியோர் அடங்கிய ஏலக்குழு 04.01.2022 முதல் 08.01.2022 வரை பொது ஏலம் காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடத்தி உரிமைக் கோரப்படாத மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட 1896 வாகனங்களை ஏலமிட்டு ரூ.1,11,29,624/- தொகை வசூலிக்கப்பட்டு மாவட்ட வருவாய் கணக்கில் செலுத்தப்பட்டது.

மேற்படி பணியினை சிறப்பாக செய்த கூடுதல் கண்காணிப்பாளர், தலைமையகம், காவல் துணை கண்காணிப்பாளர், ஆயுதப்படை, காஞ்சிபுரம் மற்றும் குழுவினரை காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் மற்றும் குழுவினரை காவல் கண்காணிப்பாளர்  பாராட்டினார்.

Tags:    

Similar News