காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-22 15:00 GMT

காஞ்சிபுரம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள்.

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாயார் குளம் பகுதியில் ராம்ராஜ் ( 50 )என்பவரது கடை மற்றும் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து தாலுகா காவல் ஆய்வாளர் ராஜகோபாலன் தலைமையிலான காவல்துறையினர் அவரது கடை மற்றும் வீட்டில் சோதனையிட்டனர்.

இதில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் 30 மூட்டைகள் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் அதை விற்பனை செய்ய உடன் செயல்பட்ட கணேஷ்(29) மற்றும் வேலுசாமி(52) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு அவர்கள் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள்,  பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பான்மசலா பொருட்களின் மதிப்பு ரூபாய் 4.5 லட்சம் என தெரியவருகிறது

Tags:    

Similar News