ஜூலை 24 முதல் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குவதாக சங்கரமடம் அறிவிப்பு.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரிக்கை மணிமண்டபத்தில் ஜூலை 24 ல் சாதுர்மாஸ்ய விரதம் துவங்குகிறார்

Update: 2021-07-13 05:30 GMT

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

மழைக்காலத்தில் புதியதாக புற்கள் செடிகள் துளிர்விடும் புழு பூச்சிகள் மண்ணில் இருந்து வெளிவரத் தொடங்கும். இந்நிலையில் இயற்கையின் கட்டமைப்பு பாதிக்காத வண்ணம், இயற்கைக்கு எவ்வித கேடும் விளைவிக்காத படி அகிம்சை நெறிப்படி சங்கராச்சாரியார்கள் நான்கு மாதங்கள் ஒரு இடத்திலேயே தங்கி தங்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வார்கள். இதற்கு சாதுர்மாஸ்ய விரதம் என்று பெயர்.

அவ்வகையில் காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் தனது சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சிபுரம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாஸ்வாமிகள் மணிமண்டபத்தில் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 20ஆம் தேதி நிறைவு செய்கிறார்.

சாதுர்மாஸ்ய விரதத்தில் எல்லா நாட்களிலும் சந்திரமௌலீஸ்வரர் பூஜை,  பிக்ஷா வந்தனமும்,  பஞ்சாங்க கருத்தரங்குகள்,  வேத பாராயண உரைகள் என  காலை மாலை என இருவேளைகளும் நடைபெறும்.

இக்காலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் பக்தர்கள் அரசு வகுத்துள்ள கொரோனா வழிகாட்டு வழிமுறைகளை கடைபிடித்து கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ சங்கர மடம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News