ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவுகளை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-14 02:15 GMT

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்,  ஊராட்சி மன்ற தலைவர் ,  ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் , மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இவர்கள் தேர்தலில் அதிகபட்ச தேர்தல் செலவு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ9000

ஊராட்சி மன்ற தலைவர் - ரூ34000

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் - ரூ85000

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ1,70,000 

மேற்கூறப்பட்ட தொகையை மட்டும் செலவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவின கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கத் தவறியவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாதவர்கள் என மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News