சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை: காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை செய்யக்கோரி காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

Update: 2022-04-11 05:15 GMT

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்த இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள்.

தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள்  சொத்துவரி இணை 25 சதவீதம் முதல் 150 முறை உயர்த்திக்கொள்ள மன்ற கூட்டங்களை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்றவுடன் உள்ளாட்சி தீர்மானிக்கும் உரிமையை முற்றிலும் பாதிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் கட்டண உயர்விற்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமில்லாமல் மன்றங்களையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து மக்களும் வாழ்வாதாரம் இழந்த நிலையிலும் , வர்த்தக நிறுவனங்கள் பொது முடக்கம் காரணமாக வியாபாரத்தில் இழந்து தற்போது மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் வழியில் இந்த சொத்து வரி உயர்வு அதிகம் பாதிப்பதாக கூறுகின்றனர்.

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் அதன் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் நாராயணனை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிகழ்வின்போது தொழிற்சங்க நிர்வாகி முத்துக்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News