விளையாட்டு வீரர் நலன் காக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-30 05:15 GMT

மாவட்ட விளையாட்டு அரங்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்.

காஞ்சிபுரம் மாவட்டம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது மாவட்ட விளையாட்டு அரங்கம். இங்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் நாள்தோறும் காலை மாலை வேளைகளில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இதுமட்டுமில்லாமல் காலை மாலை வேளைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நடை பயிற்சியாளர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் அவர்களின் தீவிர நடவடிக்கையால் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம் தற்போது பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் வந்துள்ளது.

இந்நிலையில் விளையாட்டு வீரர்களின் நலன் காக்க மிக முக்கியமாக உதவுவது குடியுங்கள் என்பதால் இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல லட்சம் மதிப்பில் விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சி அவர்கள் பயன்பெறும் வகையில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு அதனை இன்று காலை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி‌எம்.பி.எழிலரசன் மற்றும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்த ரோட்டரி சங்க நிர்வாகிகளின்‌ செயலை விளையாட்டு வீரர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சி கிழக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News