ஏரியில் கழிவுநீர் கலப்பதாக ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்த தேனம்பாக்கம் மக்கள்

குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஏரி வரத்து கால்வாயில் கலப்பதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Update: 2022-05-09 07:45 GMT

தேனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மாமன்ற உறுப்பினர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மனு அளிக்க வந்தபோது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்டது தேனம்பாக்கம் கிராமம். இங்கு பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் புறநகர் பகுதி வளர்ச்சிக்கு பெரிதும் இப்பகுதிஉள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஏரி விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாகவே இப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளின் கழிவு நீர், கால்வாயில் விடப்படுவதால் ஏரி மாசடைந்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரம் பாதிப்படுவதை தடுக்க கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மாநகராட்சி உறுப்பினர் சங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர். மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி காஞ்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தேனம்பாக்கம் ஏரியை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News