அரசு நிலத்தை அரசுக்கே விற்ற வழக்கில் உண்மைகள் வெளியாகுமா

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பீமந்தங்கல் கிராமத்தில் அரசு அனாதீனம் நிலத்தைக் அரசுக்கு விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை காஞ்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து உள்ளனர். இவர்களின் விசாரணையில் பல உண்மைகள் வெளியாகும் என தெரியவருகிறது.

Update: 2021-07-05 13:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பீமன் தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்தை அரசுக்கு சென்னை பெங்களூரு விரைவு சாலை விற்ற வழக்கில் அரசுக்கு பல நூறு கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யபட்டது.

இவ்விசாரணையில் முதல்கட்டமாக 33 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஹர்ஷத் ஜெயின் மற்றும் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த செல்வம் ஆகிய இருவரை கடந்த ஒரு வாரம் முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் இவர்கள் மூலம் எவருக்கேனும் தொடர்பு உள்ளதா எனும் கோணத்தில் விசாரணையை மேற்கொள்ள இவர்கள் இருவரை  காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மாவட்ட குற்றப்பிரிவு மனு அளித்து இன்று இருவரையும் விசாரணைக்காக மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு சிறப்பு தனிப்படையினர் அழைத்துவரப்பட்டனர்.

இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டால் அரசு நிலத்தை அரசுக்கே  விற்ற மற்ற நபர்களை எளிதில் அடையாளம் காண இயலும் எனவும் வழக்கு விரைவாக முடிக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு அரசுக்கு வருவாய் இழப்பு என்பதால் தனி கவனம் கொண்டு மோசடி நபர்கள் கண்டுபிடிக்க சிபிசிஐடி மாற்ற உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

Tags:    

Similar News