போதை பொருள் விற்பனையை ஒழிக்க கோரி காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் பா.ம.க. மனு

PMK Tamilnadu- காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் தலைமையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி மனு அளித்தனர்.

Update: 2022-08-01 09:00 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் எஸ்.பி.யிடம் மனு அளித்தனர்.

PMK Tamilnadu- உலகிலேயே அதிக அளவில் இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தமிழ்நாட்டில் 34 வயதுடையோர் 50 விழுக்காடு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவார்கள் என்று நம்பும் நிலையில் தற்போது பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை உருவாகிறது.

இதற்கு போதைப் பொருட்கள் பெட்டிக்கடைகள் கூட விளம்பரப் பொருளாக தொங்கவிடப்பட்டு அவர்களின் ஆவலை தூண்டும் விதமாக செயல்படுவது முக்கிய காரணமாக விளங்குகிறது. அவ்வப்போது காவல்துறையினர் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தாலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் வட மாநில தொழிலாளர்கள் போதை பொருட்களை விரும்பி கேட்பதால் இதன் விற்பனை அதிகரித்துள்ளது.

இதே நிலை நீடித்தால் இளைஞர்களின் வாழ்வு சீரழியும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டம் தோறும் போதைப் பொருட்களை தடை செய்யக்கோரி மாபெரும் போராட்ட நிகழ்வை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தா.ஹரிகிருஷ்ணன் தலைமையில் பா.ம.க.வினர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதில் ஸ்ரீபெரும்புதூர் , ஒரகடம்,  குன்றத்தூர் பகுதிகளில் பெரும் அளவு போதை பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ளதாகவும் இதனை உடனடியாக காவல்துறை அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்து அவர்களுக்கு எச்சரிக்கை விட வேண்டும் எனவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முற்றிலும் போதை பொருட்கள் தடை செய்து, இளைஞர்களின் வாழ்வுக்கு காவல்துறை உதவ வேண்டும் எனவும் இம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் உமாபதி , கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குன்னம் சங்கர் , கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் இரா.சண்முகம் , நகர துணை செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பா.ம.க.வினர் உடன் இருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News