காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்.

Update: 2022-03-02 09:15 GMT

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் உற்சவத்தையொட்டி பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் சாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலின் வருடாந்திர பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. திருக்கோயில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கும் பணியும் தூய்மைப்படுத்தும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்த பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தில் மார்ச் 13ஆம் தேதி வெள்ளி தேர் உற்சவம், மார்ச் 14-ஆம் தேதி ரதோத்ஸவம் ,  மார்ச் 16 ஆம் தேதி வெள்ளி மாவடி சேவையும்,  மார்ச் 17ஆம் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News