காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 8க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Update: 2022-04-05 12:45 GMT

கீழ்கதிர்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் தரத்தை ஆய்வு செய்த காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது.

தற்போது அறுவடை காலம் துவங்கி விட்டபடியால் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 83 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலனுக்காக  திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 3 நாட்களில் இதுவரை 8 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் துவைத்து வைத்துள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் மற்றும் விலாப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் கொள்முதல் செய்யப்பட்ட நெல்களின் தரம்  மற்றும் விலை குறித்து கேட்டறிந்தார்.

விவசாய மாவட்டம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் விவசாயிகள் கடந்த பருவத்தில் அதிக அளவு விவசாயத்தில் ஈடுபட்டதும், அதன் விளைவாக பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் குவிந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் , மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News