தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆலோசனை மையம் திறப்பு :எஸ்.பி பங்கேற்பு

மருத்துவர் உங்களுக்காக எனும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ஆலோசனை மையம் தொடக்கம்

Update: 2022-05-04 08:30 GMT

 தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி ஆணையை வழங்கிய மாவட்ட எஸ்.பி.எம்.சுதாகர்

*மருத்துவர் உங்களுக்காக* எனும் பெயரில் தனியார் தொண்டு நிறுவனம் கடந்த 2007 முதல் செயல்பட்டு வருகிறது. இது குறிப்பாக பேரிடர் காலங்களில் மருத்துவ வசதி தேவைப்படும் பொதுமக்களுக்காக தொடங்கப்பட்டு தற்போது வரை  செயல்பட்டு வருகிறது. இத் தொண்டு நிறுவனம் பல்வேறு தனியார் தொழிற்சாலை நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியை மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுத்தருவது,  ஆம்புலன்ஸ் வாகனங்களை இலவசமாக அளிப்பது போன்ற சேவைகளையும் செய்து வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் காரியாபட்டி பகுதியில் இயங்கிவரும் அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் மருத்துவமனை சுமார் 25 லட்சம் மதிப்பிலான ஐ.சி.யு அமைப்பு மற்றும் அதிநவீன உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் கடந்த ௧௪-ஆம் தேதி வழங்கியது. இதற்கான ஊழியர்களை இன்று நியமித்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர்  எஸ்பி சுதாகர்  பேசியதாவது:  மருத்துவ சேவை என்பது மகத்தானது ஒன்று எனவும் , நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் அளித்து அவர்கள் உயிர்ப்பிக்கும் பொழுது அளப்பரிய மகிழ்ச்சி அனைவருக்கும் ஏற்படுகிறது.இச்சேவையை செய்யும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் எனவும், தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு மருத்துவமனைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்து மருத்துவ சேவைகளை இந்த தொண்டு நிறுவனம் உதவ வேண்டும். இதில் பணிபுரிய வந்த அனைத்து ஊழியர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்  என்றார் . இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News