18 திருநங்கைகள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78 திருநங்கைகள் வாக்காளர்களாக இருந்த நிலையில் 18 பேர் மட்டுமே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளனர்.

Update: 2021-10-10 01:45 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 399 ஆண் வாக்காளர்களும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 533 பெண் வாக்காளர்களும் 78 திருநங்கைகள் என மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 86 ஆயிரத்து 10 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 1281 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை ஊர்காவல்படை என அனைத்து தரப்பினரும் வாக்குப் பதிவிற்காக பணியாற்றினர்.

இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று அனைத்து வாக்கு சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் காவல்துறை பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 308 ஆண்களும் 2 லட்சத்து 69 ஆயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு பெண்களும் 18 திருநங்கைகள் என 5 லட்சத்து 34 ஆயிரத்து 130 பேர் வாக்களித்தனர்.

மாவட்டம் முழுவதும் 78 திருநங்கைகள் ஐந்து ஒன்றியங்களிலும உள்ள நிலையில் 18 திருநங்கைகள் மட்டுமே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளனர் .

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 12 வாக்காளர்களில் 4 பேரும் , உத்தரமேரூர் ஒன்றியத்தில்  7 வாக்காளர்களில் 2பேரும் , வாலாஜாபாத் ஒன்றியத்தில் 7 வாக்காளர்களில் ஒருவரும் , ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 11 வாக்காளர்களில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை. குன்றத்தூர் ஒன்றியத்தில் 41 வாக்காளர்கள் இருந்த நிலையில் 11 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட 5 ஒன்றியங்களில் 78 வாக்காளர்கள் இருந்த நிலையில் 18 வாக்காளர்கள் வாககு செலுத்தியுள்ளது. இது 23 சதவீத வாக்குப்பதிவை காட்டுகிறது.

Tags:    

Similar News